"பண்டிட் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டது வெளிநாட்டு சதி" - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 2669
"பண்டிட் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டது வெளிநாட்டு சதி" - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பண்டிட் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு சதி உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் பேசிய அவர், நமது அண்டை நாடு வெறுப்பு விதைகளை விதைக்கிறது என்றும், அத்தகைய முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.

எந்த மதம் சார்ந்தவரையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையரை நிறைவடைந்து விட்டதால்,நடப்பு ஆண்டின் இறுதியில் தேர்தல் செயல்முறை தொடங்கும் என்றும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments